நிக் மார்வின்

நிக் மார்வின் தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் அன்றாடப் பணியில் ஈடுபடாத செயல் இயக்குனராகவும், மேலாண்மை ஆலோசகராகவும் உள்ளார். இன்றைய நிலையில், உயிரிமருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுப்புற சூழல் ஆலோசனை மற்றும் பொறியியல், தொலைத் தொடர்பு, தொழில்முறைக்கல்வி, உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் நிக் மார்வின் செய்துள்ள பங்களிப்பு, அவரது பன்முக திறமைகளை நிருபிக்க போதுமானதாக உள்ளன.

அண்மையில் ஆன்ட்ரு ஃபாரஸ்ட்(Andrew Forrest)-ன் உலக ரக்பி தொடர் மற்றும் வெஸ்டர்ன் போர்ஸ் (Western Force) போன்றவற்றின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை நிக் மார்வின் வகித்தார்.

அதற்கு முன்னதாக, பெர்த் வைல்ட்கேட்ஸ் (Perth Wildcats) மற்றும் பெர்த் லிங்ஸ் (Perth Lynx) அணிகளுக்கு மேலாண்மை இயக்குனராக இருந்த அவர், தேசிய கூடைப்பந்து லீக் அணி(National Basketball League)க்கு முழு நேர பொறுப்பில் இல்லாத செயல் தலைவராகவும் இருந்தார்.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைப் பட்டப்படிப்பு (MBA) முடித்துள்ள நிக் மார்வின், ஆஸ்திரேலிய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மேதகு உறுப்பினர் (Fellow of Australian Institute of Management) என்பதோடு, சான்றிதழ் பெற்ற மேலாண்மை ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிக் மார்வின் – ஏஐசிடி (AICD), டிஎம்ஏ (TMA), ஐஎம்சி (IMC) போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளார்.